சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை விதித்துள்ள தைவான்..!
Taiwan has banned Chinese universities
தைவான் எல்லை பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 07 பல்கலைக்கழகங்களுக்கு தைவான் அதிரடியாக தடை விதித்துள்ளது. அதில் சீனாவின் பீஹாங் பல்கலைக்கழகம், பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட07 பல்கலைக்கழகங்கள் அடங்கும்.

இது குறித்து தைவான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனுடன் தைவானில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது' எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் இருந்து, 1949-இல் தைவான் தனிநாடாக பிரிந்து சென்றது. மீண்டும் தைவானை தன்னுடன் இணைக்க சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தைவான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தை தூண்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Taiwan has banned Chinese universities