ரஷ்யா உக்ரைன் போர் : வாட்ஸ்அப் தடையால்.. டெலிகிராமுக்கு அடித்த ஜாக்பாட்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவில் பல சமூக வலைதளங்கள் செயல்படவில்லை. குறிப்பாக வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தங்களது சேவையை ரஷ்யாவில் நிறுத்திக்கொண்டது.

மேலும் ரஷ்ய அரசு குறித்து பேஸ்புக் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் போர் குறித்து தவறான செய்திகள் வருவதையொட்டி பல்வேறு சமூக வலைதளங்களை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஷ்யாவில் வாட்ஸ்அப் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு டெலிகிராம் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் போர் தொடக்கத்தின் போது பயனாளர்களின் எண்ணிக்கை 42 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 63 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனால் ரஷ்யாவின் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் வாட்ஸ் அப்பை பின்னுக்குத் தள்ளி டெலிகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telegram no 1 social media in Russia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->