ஆந்திர சட்டசபையில் அமளி - பத்து தெலுங்கு தேச எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்.!
ten telugu desa mlas suspended one day in andira assembly
நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தில் உள்ள அமராவதியில் சட்டசபை கூட்டத் தொடர் ஆரம்பமானது. அப்போது சபாநாயகர் தம்மேனேனி சீதாராம் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு அனுமதி அளித்தார். அந்த நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ஏலூரி சாம்பசிவராவ் பேச முயன்றுள்ளார்.
இதனால் அவருடைய மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேசுவதற்கு அனுமதி வழங்க கோரி கூச்சலிட்டனர். இதனால், அவையில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு 17 நிமிடங்கள் அனுமதி அளித்தார்.
இதனால், சட்டசபையில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அமலியில் ஈடுபட்டனர். அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி பதவியை விட்டு கீழே இறங்கு. எதிர்க்கட்சியின் குரல்வலையை நெறிக்கும் சபாநாயகர் டவுன் டவுன் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து சபாநாயகர் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பத்து பேரை இன்று ஒரு நாள் மட்டும் அவையில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கோஷமிட்டனர்.
அதன் பின்னர், சபை காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றுவதற்காக சபைக்குள் வந்தனர். இதைப்பார்த்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து வெளியேறி சென்றனர். இதனால் ஆந்திர சட்டசபையில் சில மணி நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
English Summary
ten telugu desa mlas suspended one day in andira assembly