இங்கிலாந்து | உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் உள்ள உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தெற்கு மாகாணமான சசெக்ஸ்சின் மிட்ஹர்ஸ்டின் நகரத்தில் 400 ஆண்டுகால பழமையான தி ஏஞ்சல் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. மிகவும் பிரபலமான இந்த ஓட்டலில் அரசு ஆணைப்படி கடந்த ஆண்டு உக்ரைன் அகதிகள் தங்க அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட உக்ரைன் அகதிகள் ஓட்டலில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை தி ஏஞ்சல் ஓட்டல் அருகே உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ, ஓட்டலின் கூரைக்கும் பரவியது. இதையடுத்து கூரையிலிருந்து ஓட்டலின் மேல் தளத்திற்கு தீ வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தை கட்டுப்படுத்த 15 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஓட்டலில் இருந்த உக்ரைன் அகதிகள் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சாலைகள் உடனடியாக மூடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrific fire accident in ukraine refugee staying hotel in UK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->