ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல்களை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை..!
Terrorist carried out attacks in Jammu and Kashmir shot dead in Pakistan
பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தலைமையில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. கடந்த 2008 நவம்பரில், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஹபீஸ் சயீத் மூளையாகச் செயல்பட்டான்.
ஹபீஸ் சயீதின் நம்பிக்கைக்குரியவராக இருந்த பயங்கரவாதி ஜியா உர் ரெஹ்மான். இவர் ஜம்மு - காஷ்மீரில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி. 43 வயதான இவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம் என்ற பகுதியில், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதி ஜியா உர் ரெஹ்மான் குறித்து, இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி ஆகிய பகுதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு, ஜியா உர் ரெஹ்மான் மூளையாகச் செயல்பட்டார் எனவும், பூஞ்ச், ரஜோரியில் நெட்வொர்க்கை உருவாக்கி, தாக்குதல்களைர நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த, 2024 ஜூன் 09-இல், பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற போது, ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தியதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர் ஜியா உர் ரெஹ்மான் என அதிகாரிகளால் தெரிவித்துள்ளனர்.
English Summary
Terrorist carried out attacks in Jammu and Kashmir shot dead in Pakistan