'அடேய்! என்னடா இது!!!-பாம்பை 'ஸ்கிப்பிங்' போல் உபயோகித்து விளையாடிய சிறுவர்கள்... - Seithipunal
Seithipunal


பாம்புகள் மனிதர்களுக்கு எதிரி என்பார்கள் . இன்னும் சிலர் பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பயங்கரமான  நீளமுள்ள பாம்பை, கயிறு போல வைத்துக்கொண்டு சிறுவர்கள் 'ஸ்கிப்பிங்' விளையாடிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், 5 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கையில் கயிறை வைத்துக்கொண்டு கயிறு தாண்டுதல், ஸ்கிப்பிங் விளையாடுவது போன்ற காட்சிகள் உள்ளது. ஆனால் அவர்கள் அருகே காட்சி செல்லும் போது தான்,அவர்கள் கயிறு போல பாம்பை வைத்துக்கொண்டு 'ஸ்கிப்பிங்' விளையாடுவது தெரிகிறது.

அந்த குழந்தைகள் சிறிதும் பயமின்றி சிரித்து பேசிக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடுகின்றனர். இதை வீடியோ எடுப்பவர்கள், அவர்கள் கையில் என்ன இருக்கிறது என்று காட்டுமாறு சிரித்து கொண்டே கேட்கிறார். அப்போது அவர்கள் தங்கள் கையில் இருப்பது மலைப்பாம்பு எனத் தெரிவித்து அதை காட்டுகின்றனர்.

வைரலான இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சிக்கொண்ட கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லேண்டில் எடுக்கப்பட்டதாகவும் அங்குள்ள பழங்குடியின சிறுவர்கள், இறந்த மலைப்பாம்பை வைத்து விளையாடியதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் இறந்த பாம்புக்கு மரியாதை தராமல் அதை வைத்து விளையாடுவது சங்கடமாக உள்ளது என வீடியோவை பார்த்த ஒருவர் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The boys played with the snake as if it were skipping


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->