ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு - இஸ்ரேல் ராணுவம்!
The main commander of the hezbullah organization was killed israel army
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைடைவந்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வந்தனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.
அதன்படி இஸ்ரேலில் உள்ள நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்த நிலையில், லெபனான் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
சுஹைல் ஹுசைனி ஹிஸ்புல்லா அமைப்பின் பல்வேறு துறை சார்ந்த நிர்வாகத்தை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தவர் என்றும், ஹிஸ்புல்லா ராணுவ கவுன்சிலில் உறுப்பினராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இவர் ஈரானில் இருந்து நவீன ஆயுதங்களை கொண்டு வந்து, அதனை ஹிஸ்புல்லா பிரிவுகளுக்கு விநியோகிப்பதில் இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
The main commander of the hezbullah organization was killed israel army