இரத்தத்தைப் போல காட்சியளிக்கும் நிலா!!! மார்ச்-ல் வரவிருக்கும் முழு சந்திர கிரகணம்.... - Seithipunal
Seithipunal


பூமி, சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் என்பது ஏற்படுகிறது. பொதுவாக இயற்பியலில் சூரிய உதயம்,சூரிய அஸ்தமனத்தின் போது சூரியன் எப்படி சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறதோ... அதேபோல் தான் தற்போது வர இருக்கும் சந்திர கிரகணமும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

சந்திரனில் சிவப்பு நிறம்:

இந்த சந்திர கிரகணம் " ரேலி " சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் தோன்றுகிறது. அதாவது, குறிப்பாக சந்திரனை அடையும் ஒளியானது பூமியின் வளிமண்டலத்தின் வழியாக ஒளி விலகல் செய்யப்படுவதால் சந்திரன் சிவப்பு நிறமாக மாறும் என்கின்றனர். மேலும், இது குறுகிய அலைநீளங்களை வடிகட்டி நீண்ட அலைநீள சிவப்பு நிறங்களை மட்டுமே விட்டுச் செல்கிறது. அதனால் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்கின்றனர். இந்த சிவப்பு நிலவானது, கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பூமிக்கு முழு சந்திர கிரகணம் வருகிறது. இது மார்ச்  13,14 ஆம் தேதி 2025 அன்று இரவு, தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா பகுதியில் தெரியக்கூடும், மேலும் இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் வரையில் நீடிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சென்னையில் சந்திர கிரகணம்:

சென்னையில் இந்த கிரகணம் முழுமையாக தெரியாது என்கின்றனர். ஏனென்றால் அதன் நேரம் மற்றும் அடிவானத்துடன் ஒப்பிடும்போது சந்திரனின் நிலை காரணமாக முழுமையாக தெரியாமல் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் கிரகண கட்டங்களின் போது சந்திரன் அடிவானத்திற்கு கீழே இருக்கும். இதனால் சென்னையில் இருந்து நிகழ்வைக் கவனிக்க முடியாது. ஆனால் இந்த வானியல் நிகழ்வினை பார்ப்பதற்கு பல வானியல் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்கள் குறிப்பிடத்தக்க வான நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக அந்த அழகிய" blood moon" தருணத்தை நாம் தமிழகத்தில் இருந்து கண்டுகளிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The moon looks like blood The upcoming total lunar eclipse in March


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->