இந்தியாவிற்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்திய அமெரிக்கா ; அதிரடி காட்டிய எலோன் மஸ்க்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த நிதியை எலான் மஸ்க் தலைமையிலான டிஓஜிஇ (DOGE) குழு நிறுத்தி உள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசின் செலவினங்களை குறைப்பதற்காக எலோன் மஸ்க் தலைமையிலான டி.ஓ.ஜி.இ.( DOGE), எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு துறை ஒன்றை உருவாக்கியுள்ளார். 

குறித்த குழு தற்போது அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வருகிறது.

இந்நிலையில், இக்குழுவானது, 'இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது.

அத்துடன், வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டாலர். மொசாம்பிக் நாட்டிற்கு வழங்கி வந்த 10 மில்லியன் டாலர், கம்போடியாவில் இளைஞர்கள் திறனுக்காக வழங்கி வந்த 9.7 மில்லியன் டாலர், கம்போடியாவில் சுதந்திரமான குரல்களை பலப்படுத்துவதற்காக வழங்கப்பட்டு வந்த 2.3 மில்லியன் டாலர், பராகுவே சிவில் அமைப்பு மையத்திற்கு வழங்கி வந்த32 மில்லியன் டாலர், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகார மையத்திற்கு வழங்கிவந்த 40 மில்லியன் டாலர்,செர்பியாவில் பொது கொள்முதல் திட்டத்தை மேம்படுத்த வழங்கப்பட்டு வந்த 14 மில்லியன் டாலர், மோல்டோவாவிற்கு வழங்கப்பட்டு வந்த 486 மில்லியன் டாலர் நிறுத்தியுள்ளது. 

அத்துடன்,நேபாளத்திற்கு நிதி கூட்டாட்சிக்கு வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு பல்லுயிர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வந்த 19 மில்லியன் டாலர், லைபீரியாவிற்கு வாக்காளர் நம்பிக்கை திட்டத்திற்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் டாலர், மாலி நாட்டிற்கு சமூக ஒற்றுமைக்காக வழங்கப்பட்ட 14 மில்லியன் டாலர்,தென் ஆப்ரிக்காவில், ஜனநாயக பணிகளுக்காக வழங்கப்பட்ட 2.5 மில்லியன் டாலர், ஆசியாவில், கற்றல் மேம்பாட்டை அதிகரிக்க வழங்கப்பட்ட 47 மில்லியன் டாலர், கொசோவா ரோமா, அஷ்கலி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட 2 மில்லியன் டாலர் நிதியையும் நிறுத்தி வைக்க எலான் மஸ்க் தலைமையிலான குழு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The US has stopped funding to India


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->