சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை.! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் அமெரிக்கா மவுண்டானா மாகாணத்தின் கஸ்ஹடி நகரில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் வெள்ளை நிறத்தில் சீன உணவு பலூன் ஒன்று பறந்தது. சீனா, இந்த ரகசிய உளவு பலூனை அணு ஆயுத ஏவுதளத்தின் ரகசிய தகவல்களை சேகரிக்க அனுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, இந்த பலூன் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவையடுத்து சீன உளவு பலூன் அட்லாண்டிக் கடல்பரப்பில் பறந்தபோது, அமெரிக்க போர் விமானங்கள் ஏவுகணை மூலம் பலூனை சுட்டு வீழ்த்தின. இந்நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டு அட்லாண்டிக் கடலில் விழுந்த உளவு பலூனை அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல் படைகள் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் சீன உளவு பலூனை கைப்பற்றினர்.

மேலும் பலூனிலிருந்த கருவிகளின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து பலூனில் உள்ள கருவிகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The US Navy captured the downed Chinese spy balloon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->