அமெரிக்காவில் மூன்றாம் உலகப் போர் : டிரம்ப் அதிர்ச்சி தகவல்!
Third World War in America Trump shock information
அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் முக்கிய வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணம்,பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் இருவரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறார் என்றும், மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவேமாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறியதாக கூறிய அவர், டிரம்பே ஒரு குற்றவாளி என்றும், எனவே அவர்மீண்டும் அதிபர் ஆனால் வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார் என்று விமர்சித்தார்.
பின்னர் தொடர்ந்து பேசிய டொனால்டு டிரம்ப், கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டு அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம் என்றும், பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன் என்று கூறினார்.
மேலும் "கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். மேலும் வங்கி கடனை ரத்து செய்வதாக கூறி பைடன் ஏமாற்றியதாக தெரிவித்த அவர், எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை என்றும், அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும் என்று தெரிவித்தார்.
English Summary
Third World War in America Trump shock information