30 வருடங்களாக உறையவைக்கப்பட்ட கருமுட்டை மூலம் இரட்டைக் குழந்தைகள் - அமெரிக்கா சாதனை.!
thirty years frozen ovum twins child birth in america
அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில் வசித்து வருவபவர்கள் பிலிப் - ரேச்சல் தம்பதி. இவர்களுக்கு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கடந்த அக்டோபர் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், இந்த குழந்தைகள் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு கிரையோபிரிசர்வ் முறையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் பிறந்துள்ளன. ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன.
இந்நிலையில், அவர்கள் கரு முட்டையை தானமாக பெற்று செயற்கை கருத்தரிப்பு மூலம் மேலும் குழந்தை பெறுவதற்கு முடிவு செய்து, அதற்காக அமெரிக்காவில் உள்ள தேசிய கருமுட்டை மையத்திற்குச் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு 1992ம் ஆண்டில் இருந்து திரவ நைட்ரஜனில் பூஜ்ஜியத்திற்குக் கீழே 200 டிகிரி மைனஸ் வெப்ப நிலையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை தானமாக வழங்கப்பட்டது. இந்த கருமுட்டையை பயன்படுத்தி செயற்கை கரூவூட்டல் மூலம் உருவான இரட்டை குழந்தைகள் தற்போது பிறந்துள்ளது.
இது மருத்துவ உலகத்தில் ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டு 27 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையிலிருந்து பிறந்த மோலி கிப்சனின் சாதனையை தற்போது இந்த குழந்தைகள் முறியடித்துள்ளன. இதில், ஆண் குழந்தைக்கு திமோத்தி என்றும், பெண் குழந்தைக்கு லிடியா என்றும் பெயர் சூட்டபட்டுள்ளது.
இந்த இரட்டை குழந்தைகளின் தந்தை பிலிப் தெரிவித்துள்ளதாவது, "நாங்கள் பெற விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையை மனதில் வைத்திருக்கவில்லை. கடவுள் நமக்குக் கொடுக்க விரும்பும் அளவுக்கு எங்களிடம் குழந்தைகள் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எப்போதுமே நினைக்கிறோம்.
நாங்கள் முதல்முறையாக கரு தத்தெடுப்பு பற்றி கேள்விப்பட்டபோது, அதை செய்ய விரும்பினோம், எங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்தாலும் இவர்கள்தான் எங்களுடைய மூத்த குழந்தைகள்" அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 1992ம் ஆண்டிலிருந்து உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் பிறந்துள்ளதால், இவர்கள் இருவரும் தற்போது, உலகிலேயே வயதான குழந்தைகளாக கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
thirty years frozen ovum twins child birth in america