பயங்கர காட்டுத் தீ.! ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்... 13,000 பேர் வெளியேற்றம்...! - Seithipunal
Seithipunal


வட அமெரிக்க நாடான கனடாவின் மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் வெப்ப வானிலையால் ஆல்பர்ட்டா மாகாணத்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ பற்றி பரவத் தொடங்கியது. காட்டுத்தீயால் மாகாணத்தின் வடக்கு பகுதியான லிட்டில் ரெட் ரிவர் க்ரீ நேஷனில் 1458 ஹெக்டேர் நிலப்பரப்பும், 20 க்கும் மேற்பட்ட வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

மேலும் காட்டுத்தீயால் ஏற்படும் அதிக வெப்பத்தால் ஆல்பர்ட்டாவில் சில பகுதிகளில் பனி உருக தொடங்கியுள்ளது. இதனால் பிரிட்டிஷ், கொலம்பியா பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கேச் க்ரீக் மற்றும் கிராண்ட் ஃபோர்க்ஸ் பகுதியிலுள்ள மக்கள் வெளியேறும்படி பேரிடர் மேலாண்மை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து எட்மண்ட் மற்றும் கனடாவின் மேற்கு பகுதியில் காட்டுத்தீ மற்றும் அதிக வெப்பத்தால் 13,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் சமீப காலங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயை விட, இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thousand hector forest burnt and 13000 people evacuated due to forest fire in Canada


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->