தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபடும் டிஸ்னி நிறுவனம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபடும் டிஸ்னி நிறுவனம் - அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் படி, பொழுதுபோக்கு சேவை நிறுவனமாக இயங்கி வரும் டிஸ்னி நிறுவனம் பொழுதுபோக்கு சேவை துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையில் செலவுகளை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

ஏற்கனவே டிஸ்னி நிறுவனமும் பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியாத காரணத்தால், தங்கள் ஊழியர்களில் 7 ஆயிரம் பேரை அதிரடியாக பணியை விட்டு நீக்கியது. இந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த முறை டிஸ்னி நிறுவனத்தின் பல்வேறு உயர்மட்ட பதவிகளை வகிக்கும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் 24-ந்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thousand workers layoff in disney company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->