லெபனான்.! 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


லெபனானில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்து உள்ளது.

வடக்கு லெபனானின் பகுதியில் உள்ள குய்பே மாவட்டத்தின் திரிபோலி நகரில் நேற்று மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் லெபனான் நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நஜிப் மிகாடி, காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்குமாறு உள்ளூர் மருத்துவமனைகளிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three floors Building collapsed in Lebanon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->