வெடித்து சிதறிய எரிமலை., தாக்கிய சுனாமி.! பீதியில் குட்டி டோங்கா நாடு.!
Tonga tsunami warning undersea volcano
பசுபிக் கடலில் எரிமலை வெடித்ததால் 'டோங்கா' நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் கடலில் அமைந்துள்ள டோங்காவின் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை சீற்றத்துடன் இன்று வெடித்து சிதறியுள்ளது.
இதனையடுத்து கடலில் சுனாமி அலைகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக டோங்கா நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளியான முதல் கட்ட செய்தியின்படி, டோங்கா நாட்டின் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்ததால் மிகப்பெரிய சுனாமி அலைகள் எழுந்துள்ளது.
மேலும் மிகப்பெரிய சுனாமி அலைகள் அந்நாட்டின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து செல்வது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து டோங்கா நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
English Summary
Tonga tsunami warning undersea volcano