ஆஸ்திரேலியா செல்லும் புதிய வர்த்தக குழு! ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்துகிறது.! - Seithipunal
Seithipunal


ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்வதற்காக புதிய வர்த்தக குழு இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பொருளாதார வர்த்தக ஒப்பந்தமனது கடந்த 2ம் தேதி கையெழுத்தானது. இதனையடுத்து, வர்த்தக வாய்ப்புகள் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் ஆய்வு மேற்கொள்ள இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் தலைமையில், வர்த்தக குழு ஒன்று புதியதாக உருவாக்கப்பட்டது.

இந்த குழுவில் ஆயத்த ஆடை, பருத்தி ஆடை, ஆபரணம், தோல் ஏற்றுமதி எண்ணெய் வித்துகள், சர்வீஸ் ஏற்றுமதி சார்ந்த கவுன்சில் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.

இதனையடுத்து வர்த்தக குழுவினருடன் இணைந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான துாதுக்குழுவி இன்று ஆஸ்திரேலியா செல்கின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள வர்த்தகர்களை மெல்போர்ன், சிட்னி, பெர்த் நகரங்களில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த வர்த்தகர்களை வரும் 8 ஆம் தேதி வரை சந்திக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trading committee to Australia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->