சீனாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு..போக்குவரத்து சேவை முடக்கம்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கடந்த ஒரு மாத காலமாக நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்ஜிங்கில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பெய்ஜிங்கில் பகுதியளவுக்கு போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அந்த நகரில் உள்ள 40க்கும் மேற்பட்ட சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் 158 வழித்தடங்களில் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே சீன தலைநகர் பெய்ஜிங்கில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transport service stop in China capital Beijing


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->