டிரம்ப் அதிரடி – இந்தியா தொடர்பான புதிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பும்!
Trump action new ideas about India will stir controversy
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தனது அதிரடி நடவடிக்கைகளால் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில், இந்தியாவை பற்றி அவர் வெளியிட்ட கருத்துக்கள் புதிய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
அமெரிக்க அரசு, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டிரம்ப், “அமெரிக்கர்கள் செலுத்தும் வரிப்பணத்தை ஏன் இந்தியாவுக்குக் கொடுக்க வேண்டும்? இந்தியா ஏற்கனவே ஒரு பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசும் நிபுணர்கள், 2027க்குள் இந்தியா ஜெர்மனியை முந்தி நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் எனவும், 2030க்குள் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளும் எனவும் கணித்துள்ளனர்.
டிரம்பின் இந்த முடிவுகள், இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகளுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்புக்குரியது. இந்தியாவின் அதிக சுங்கவரி விதிப்பை விமர்சித்து வந்த டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அப்டேட்களுக்கு இணைந்திருங்கள்!
English Summary
Trump action new ideas about India will stir controversy