''நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள்'' என்ற குறுஞ்செய்தி ஆபாசம்; நீதிமன்றம் தீர்ப்பு..!
A text message saying You are beautiful is obscene
'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' என, மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது முன் பின் தெரியாத பெண்களுக்கு நள்ளிரவில் குறுஞ்செய்தி அனுப்புவது ஆபாசமான செயலாகக் கருதப்படும். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால், 'சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவரது, 'வாட்ஸாப்' எண்ணுக்கு, முன்பின் பழக்கமில்லாத நபரிடம் இருந்து, 2022-இல் சில குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

அந்த பெண்ணுக்கு நள்ளிரவில் அனுப்பப்பட்ட அந்த குறுஞ்செய்தியில், 'உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது; நீங்கள் ஒல்லியாக, அழகாக உள்ளீர்கள்; உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்பது உட்பட அவரை வர்ணித்து சில தகவல்களும், புகைப்படங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த குறுஞ்செய்தி குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை . தொடர்ந்து, 'மெபைல் போன்' எண் அடிப்படையில் அந்த குறுஞ்செய்தி அனுப்பிய நபரை போலீசார் மடக்கி வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பிய நபருக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மூன்று மாத சிறை தண்டனை விதித்து, 2022-இல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் கடந்த, 18-இல் தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கில், குற்றவாளி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மனுதாரர் தரப்பில் தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், குற்றவாளி தரப்பில் இருந்து ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதனால், சமூகத்தில் எது ஆபாசம் என்பதை, சாமானிய மனிதரின் பார்வையில் இருந்து தான் தீர்மானிக்க வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு, நள்ளிரவில், 'நீங்கள் அழகாக உள்ளீர்கள்' என, குறுஞ்செய்தி அனுப்புவது ஆபாசமான செயல்தான்என கூறி, குற்றவாளிக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தண்டனை சரியே என நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.
English Summary
A text message saying You are beautiful is obscene