போப் பிரான்சிசின் இறுதிச் சடங்கு: நிபந்தனையற்ற போர்நிறுத்தம் தொடர்பில் ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை..!
Trump and Zelensky talks on unconditional ceasefire
போப் பிரான்சிசின் இறுதிச் சடங்கு வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கிற்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சிறிது நேரம் சந்தித்தார் என்பதை வெள்ளை மாளிகை மற்றும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் உறுதிப்படுத்தி இருந்தன.
இந்நிலையில் இந்த சந்திப்பு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தில் கவனம் செலுத்தியதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு நல்ல சந்திப்பு. நாங்கள் நேரில் நிறைய விவாதித்தோம். நாங்கள் உள்ளடக்கிய அனைத்திலும் முடிவுகளை எதிர்பார்க்கிறோம். எங்கள் மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல். முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம்.
மற்றொரு போர் வெடிப்பதைத் தடுக்கும் நம்பகமான மற்றும் நீடித்த அமைதி. கூட்டு முடிவுகளை அடைந்தால், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறக்கூடியதாக இந்த சந்திப்பு அமையும். அமெரிக்கா ஜனாதிபதிக்கு நன்ற என்று அவர் பதிவிட்டுள்ளார்.
English Summary
Trump and Zelensky talks on unconditional ceasefire