இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவில் தற்பொழுது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சாலமன் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மற்றும் பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும் திறந்தவெளியில் மைதானங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் சாலமன் தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் 300 பேர் காயம் அடைந்தனர். மீண்டும் இன்று சாலமன் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tsunami warning after another earthquake hits Indonesia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->