துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது..!!
Turkey Syria earthquake death exceeds 50 thousand
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் கண்ணிமைக்கும் நேரத்தில் பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கி தர மாட்டமாகின.
இந்த நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணோடு புதைந்து போனார்கள். அதன் பிறகு கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்திற்கு பல உலக நாடுகள் உதவி கரம் நீட்டிய நிலையில் கட்டிட இடிபாடுகளிலிருந்து குவியல் குவியிலாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வண்ணம் இருந்து வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 18 நாட்கள் கடந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 50,000ஐ கடந்துள்ளது.
இரு நாடுகளிலும் சுமார் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும் 5.2 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துருக்கியின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
English Summary
Turkey Syria earthquake death exceeds 50 thousand