ரஷ்யா - உக்ரைன் போர் : ஏவுகணைத் தாக்குதலில் 29 பேர் பாலி.!  - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடங்கியது. முதலில் உக்ரைன் நாட்டின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என்றுத் தெரிவித்து போரை தொடங்கிய ரஷியா அதன் பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் மின்நிலையங்கள் என்று அனைத்தின் மீதும் தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. 

அந்த வகையில், தற்போது ரஷிய படைகள் உக்ரைன் நாட்டின் பொது உள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைனின் தலைநகரான கீவை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக முயன்றனர். ஆனால் உக்ரைனின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

அதையடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது கவனத்தை திருப்பிய ரஷிய படைகள் கடுமையான தாக்குதல்கள் மூலம் பல நகரங்களை கைப்பற்றின. 

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரஷிய படைகள் மீண்டும் கீவ் நகர் மீது கவனத்தை செலுத்தி, அங்கு ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி சரமாரியாக தாக்குதல்களை மேற்கொண்டன. 

இதைத்தொடர்ந்து, ரஷிய படைகள் நேற்று முன் தினம் அதிகாலை கீவ் நகர் மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குத்தல் நடத்தின. இந்த ஏவுகணைத் தாக்குதலில் கீவ் நகரம் அதிர்ந்தது.

இதில் பதினெட்டு வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இந்தத் தாக்குதலில் பல கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த நிலையில் டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் இருபத்தொன்பது பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற தாக்குதலில் எழுபத்து மூன்று பேர் காயமடைந்தனர், அவர்களில் முப்பது பேர் மருத்துவமனையில் உள்ளனர் என்று டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவரான வேலண்டின் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

மேலும், மருத்துவமனையில் உள்ளவர்களில் குறைந்தது பன்னிரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த 39 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty nine peoples died for missile attack in ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->