ஒருமணி நேரத்திற்கு 23 பேர் பணிநீக்கம் - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோன தொற்று, உக்ரைன்- ரஷ்யா போர் மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஐடி நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. 

இந்த நிலையில், இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு இருபத்து மூன்று தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றுத் தெரிய வந்துள்ளது.

அதாவது, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரித்து வரும் `layoff.fyi’ வலைதளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உலகளவில் 2,120 தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை 4.04 லட்சம் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது தெரிய வந்துள்ளது. 

அதே போன்று, கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் ஆயிரத்து அறுபத்து ஒன்று தொழில்நுட்ப நிறுவனங்கள் 1.64 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இந்த ஆண்டில் கடந்த பதிமூன்றாம் தேதி வரை 1,059 நிறுவனங்கள் 2.40 லட்சம் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன. 

மேலும், அந்த ஆய்வில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தினமும் சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இருபத்து மூன்று பணியாளர்கள் வேலை இழப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty three employees lay off at every time in it companies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->