துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் குப்பைகளால் தத்தளிக்கும் ட்விட்டர் தலைமையகம்.!
twitter head office Cleaning staffs strike for salry increase
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த பணக்காரரான எலான் மஸ்க் அதிக தொகை கொடுத்து வாங்கினார்.
அதன் பின்னர் அந்த நிறுவனத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வருகிறார். இந்த மாற்றங்களை பலரும் விமர்சித்து வருகின்றனர். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஏராளமான உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.
இதைத்தொடர்ந்து, எலான் மஸ்க், சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டர் தலைமையகத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் ஊழியர்கள் அனைவரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் துப்புரவு பணியாளர்கள் ஊசம்பள உயர்வு கேட்டதற்கு எலான் மஸ்க் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் டுவிட்டர் தலைமையகம் குப்பைக்காடாக காட்சியளித்தது.
மேலும், தலைமையகத்தில் உள்ள கழிவறைகள் அழுக்குபடிந்து காணப்படுவதாகவும், மீதமான உணவுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், கழிவறைகளில் உள்ள பொருட்களை மாற்றுவதற்கு துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் ஊழியர்கள் சொந்தமாக 'டாய்லெட் பேப்பர்'களை கொண்டு வந்து பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
twitter head office Cleaning staffs strike for salry increase