பணியை விட்டு நீக்கியவர்களை மீண்டும் பணிக்கு அழைப்பதற்கு காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை வாங்கினார். அதன் பின்னர், டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

அதில் ஒருபகுதியாக, உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை அதிரடியாக நீக்கினார். மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அந்த வகையில், உலகம் முழுவதும் டுவிட்டர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில், 50 சதவிகிதம் பேரை கடந்த 4-ம் தேதி டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது. இது தொடர்பாக டுவிட்டர் ஊழியர்களுக்கு இணையதள முகவரி மூலம் தகவல் அனுப்பப்பட்டது.

ஒரே நாளில் டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து 50 சதவிகித ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஊழியர் மத்தியிலும், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தற்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலரை மீண்டும் வேலைக்கு வருமாறு டுவிட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஊழியர்கள் சிலரிடம் தவறுதலாக பணி நீக்கம் செய்துவிட்டோம் அதனால், மீண்டும் பணிக்கு வரும்படி டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், டுவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து எலான் மஸ்க் வைத்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு சில ஊழியர்களின் வேலை மற்றும் அனுபவம் தேவைப்படும் என்பதை உணராமல் டுவிட்டர் நிறுவனம் அவர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், ஊழியர்களின் மதிப்பை உணர்ந்து அவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு டுவிட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter owner elon musk mail forward to dissmiss employers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->