மெக்சிகோவில் துப்பாக்கி முனையில் 4 அமெரிக்கர்கள் கடத்தல்.! 2 பேர் சடலமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களில் இருவர் இறந்துவிட்டதாகவும், இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கடந்த மார்ச் 3 அன்று டெக்சாஸிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 4 பேர் காரில் அமெரிக்க எல்லையைத் தாண்டி மெக்சிகோவின் வடகிழக்கு மாநிலமான தமௌலிபாஸில் உள்ள மாடமோரோஸ் நகருக்குள் சென்றுள்ளனர். அப்பொழுது ஆயுதமேந்திய மர்ம கும்பல் அவர்களை துப்பாக்கிய முனையில், மற்றொரு காருக்கு மாற்றி கடத்திச் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அதிகாரிகள் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், மாடமோரோஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கடத்தப்பட்ட நான்கு பேரில் இருவர் உயிருடனும், இருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். மேலும் தமௌலிபாஸைச் சேர்ந்த 24 வயதான ஜோஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து உயிர் பிழைத்த இரண்டு பேரும் மாடமோரோஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தமௌலிபாஸ் அட்டர்னி ஜெனரல் இர்விங் பாரியோஸ் மோஜிகா தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two dead two alive after Americans kidnapped in Mexico


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->