அடுத்தடுத்து நிலநடுக்கம் - கியூபா மக்களின் நிலை என்ன?
two times earthquakes in cuba country
கியூபா நாட்டின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர்.
கியூபா நாட்டில் பார்ட்டோலோம் மாசாவின் கடற்கரை பகுதியில் தெற்கே 40 கி.மீட்டர் தொலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபா மற்றும் ஹோல்யின், குவான்ட்னாமோ உள்ளிட்ட நகரிங்களிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் உணரப்பட்ட அடுத்த சிலமணி நேரத்தில் பார்ட்டோலோம் மாசா கடலுக்கு அடியில் 22 மைல் ஆழத்தில் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த புதன்கிழமை ரபேல் புயல் வடக்கு கியூபாவை கடுமையாக தாக்கியதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two times earthquakes in cuba country