வியட்நாமை சூறையாடி வரும் யாகி புயல்!... இதுவரை மழைக்கு 59 பேர் பலி! - Seithipunal
Seithipunal


வியட்நாம் நாட்டினை சனிக்கிழமை தாக்கிய யாகி சூறாவளி புயலால் அங்கு தொடர் கனமழை பெய்தது. இந்த நிலையில் யாகி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வலுவிழந்ததால்,வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 50 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை காவ் பாங் மாகாணத்தில் 20 பேருடன் சென்ற பயணிகள் பேருந்து ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது.

தொடர்ந்து மீட்புப் படையினர் குவிக்கப்பட்ட போதிலும், அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் புதோ மாகாணத்தில் இன்று காலை ஆற்றின் மீது இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில், 2 மோட்டார் சைக்கிள்கள், 10 கார்கள் மற்றும் டிரக்குகள் ஆற்றில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆற்றில் இருந்து மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 13 பேரை காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் அங்கு இதுவரை யாகி புயலுக்கு 59 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக யாகி புயலால் கடந்த வாரம் பிலிப்பைன்சில் 20 பேரும், தெற்கு சீனாவில் நான்கு பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Typhoon Yagi is ravaging Vietnam So far 59 people have died due to rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->