இஸ்ரேல் போர் நிறுத்தம் - ஹமாஸ் வைத்த கோரிக்கை - அமெரிக்கா வெளியிட்ட தகவல்! - Seithipunal
Seithipunal


 இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு தொடங்கி இடை விடாமல் போர் நடந்து வருகிறது. காஸாவை தொடர்ந்து தற்போது ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்தான பரிந்துரைகளை இஸ்ரேலிடம் முன் வைத்துள்ளது. அதன்படி ஆறு வாரத்திற்கு போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் காஸாவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகிய முக்கிய பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

ஆனால் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவதை இஸ்ரேல் நிராகரித்து விட்டதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து அமெரிக்க தரப்பு ஹமாஸ் அமைப்பின் கோரிக்கைகள் சில ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் எதிர்பார்க்காதவையாக உள்ளதாக தெரிவித்துள்ளது. 

போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் இதுவரை போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் யாரும் எதுவும் இதுவரை கூறவில்லை. அதுகுறித்து எந்த விவரமும் எங்களுக்கு தெரிய வரவில்லை என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

U S Says About Israel Palestine Armistice


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->