வங்கக் கடலில் உருவாக போகும் புயலின் பெயர் "மாண்டஸ்"..! பெயர் வைப்பதற்கான காரணம் இதோ..!! - Seithipunal
Seithipunal


அந்தமானின் தெற்கு வங்கக்கடல் ஊட்டிய கடற் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி வரும் 8ம் தேதி காலை வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..

இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் "மாண்டஸ்" என்ற பெயரை சூட்ட பரிந்துரைத்துள்ளது.

உலக வானிலை மையத்தின் தலைவராக இருப்பவர் ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல் மாண்டஸ். இவர் வானவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரது பெயரில் உள்ள மாண்டஸ் என்ற பெயரைத்தான் ஐக்கிய அரபு நாடு புயலுக்கு பரிந்துரைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UAE suggested the name Mandous for the cyclone


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->