கிரிமியாவில் தொடரும் குண்டு வெடிப்புகளால் ரஷ்யா கவலை.! இங்கிலாந்து உளவுத்துறை - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீதான போரில் ரஷ்யா முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் தெற்குப்பகுதியை தாக்குவதற்கு ரஷ்யா கிரிமியாவை பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கிரிமியாவில் உள்ள ரஷ்ய ராணுவ விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் போர் விமானங்கள் எரிந்து சேதமடைந்தது.

மேலும் நேற்று முன்தினம் கிரிமியாவின் ரஷ்யா ஆயுதக்கடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில் அப்பகுதியை சுற்றியுள்ள 3000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சதி வேலை நடந்திருப்பதாக ரஷ்ய கருதுகிறது. மேலும் இந்த குண்டுவெடிப்பு ரஷ்யாவை கவலையில் ஆழ்த்தி உள்ளதாக இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.

"ஆக்கிரமிப்புக்கு பின்பு ரஷ்யாவின் ராணுவ தளமாக செயல்படும் கிரீமியா முழுவதும் பாதுகாப்பு நிலைமை மோசமாகியுள்ளது குறித்து ரஷ்ய அதிகாரிகள் அதிகளவில் கவலைப்படுவார்கள்" என்று இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UK intelligence says Russia concerns with attack on crimea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->