உக்ரைன் சரக்கு விமானம் விபத்தில் சிக்கி 8 பேர் பலி.!
Ukraine cargo aircraft crashes in Greece 8 died
கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டை சேர்ந்த சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆன்டனோவ் ரக சரக்கு விமானம் ஏஎன்-12 செர்பியாவில் இருந்து புறப்பட்டு ஜோர்டான் நோக்கி செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது.
விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அருகிலுள்ள கவலா விமான நிலையத்தில் தரையிறக்க விமானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும் விமான நிலையத்திற்கு 40 கி.மீ. தொலைவு முன்பே கிரீஸ் நாட்டின் வடக்கே ஏஎன்-12 உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் கட்டுப்பட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
இந்நிலையில், சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய விமானம் நீண்ட நேரம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைத்தனர்.
English Summary
Ukraine cargo aircraft crashes in Greece 8 died