போரை நிறுத்த "இந்தியா" கூடுதலாக பங்காற்ற வேண்டும் - உக்ரைன் அமைச்சர் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த 14 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா மற்றும் பல நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் எமின் தபரோவா இந்தியா வந்துள்ளார்.

இதையடுத்து உக்ரைன் அமைச்சர், இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளர் சஞ்சய் வர்மாவை சந்தித்து பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அமைச்சர், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவின் பங்களிப்பை கூடுதலாக எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் பிரதமரும், உயர்மட்ட அதிகாரிகளும் இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், உக்ரைனுக்கு வருகை தருவதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த அழைப்பை பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நட்புறவை வளர்க்கவே இந்தியா வந்துள்ளதாகவும், இந்தியாவின் முயற்சி போரை முடிவுக்கு கொண்டு வர உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine minister says India contribute more to end war


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->