ரஷ்யாவின் ஏவுகணைகளை எதிர்கொள்ள வான் தாக்குதல் தடுப்பு சாதனங்களை வழங்க வேண்டும் - ஜி 7 நாடுகளிடம் உக்ரைன் அதிபர் கோரிக்கை
Ukraine president request to produce anti missile system from g7 countries
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன், ஜபோரிஜியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.
மேலும் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரங்களில் ஏவுகணைகள் மற்றும் வான்வெளி தாக்குதலை ரஷ்யா தீவிரபடுத்தியுள்ளது. இதற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த தாக்குதலையடுத்து உக்ரைன் அதிபர் காணொளி மூலம் ஜி7 உறுப்பு நாடுகளுடன் நடைபெற்ற அவசர கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதில் ரஷ்யாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை எதிர்கொள்ள சக்தி வாய்ந்த வான் தாக்குதல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு ஜி 7 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நவீன வான் பாதுகாப்புள்ள அமைப்புகள் இருக்கும் பொழுது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்த முடியும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
Ukraine president request to produce anti missile system from g7 countries