ரஷ்யாவின் போர்நிறுத்த அறிவிப்பை நிராகரித்தது உக்ரைன்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பத்து மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் உதவி வருகின்றது.

இந்நிலையில், உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைனில் வசிப்பவர்கள் உட்பட பலர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதால் இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாக புதின் தெரிவித்தார்.

ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என்று உக்ரைன் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அதிபர் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா, ரஷ்யா ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போதுதான் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படும் என்றும், உங்களுடைய பாசாங்குத்தனத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine rejects Russian ceasefire order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->