ரஷ்யா மற்றும் கிரீமியாவை இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் படைகள் தாக்குதல்.!
Ukraine troops attack bridges connect Russia and crimea
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன், ஜபோரிஜியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.
மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஹிமார்ஸ் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களுடன் உக்ரைன் படைகள் ரஷ்யப் படைகளின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யா மற்றும் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது உக்ரைன் படைகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தியதில் பாலத்தின் சாலைகள் சேதமடைந்துள்ளன.
மேலும் குண்டுவெடிப்பின் போது பாலத்திற்கு இணையாக உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது தீப்பொறி விழுந்து தீ பற்றியதில் 7 எரிபொருள் அடங்கிய பெட்டிகள் எரிந்து நாசமாகின.
பாலத்தின் வழியாக ரஷ்ய படைகள் ராணுவ நிலைகளை கொண்டு செல்வதை தடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ukraine troops attack bridges connect Russia and crimea