உக்ரைன் ஸபோரிஸியா அணுமின் நிலையத்தில் ஐநா நிபுணர் குழு அடுத்த வாரம் ஆய்வு.!
UN Panel Experts visit on Zaporizhia Nuclear Power Plant
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரின் தொடக்கத்திலிருந்தே உக்ரைனின் ஸபோரிஸியா அணுமின் நிலையப் பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
இந்நிலையில் ஸபோரிஸியா சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திய ஷெல் தாக்குதலால் மூடப்பட்ட அணு உலை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதையடுத்து ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி அமைப்பின் நிபுணா்கள் அடுத்த வாரம் நேரில் பார்வையிடுவதாக உக்ரைன் எரிசக்தித் தறை அமைச்சருக்கான ஆலோசகா் லனா ஸொ்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐநா குழுவின் ஆய்விற்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்தபோதும், அதைத் தடுப்பதற்கான சதி செயல்களை செய்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி மையத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் சிறு நடவடிக்கைகள் கூட தவிா்க்கப்படவேண்டியது அவசியம் என்றும், அணு மின்நிலையத்தின் உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள ஆய்விற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
UN Panel Experts visit on Zaporizhia Nuclear Power Plant