சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை - ஐ.நா. சபையில் தீர்மானம்
UN resolution to Live in basic clean and safety environment
காலநிலை மாற்றத்தால் உலகின் பல பகுதிகளில் இயற்கை நிகழ்வுகள் வழக்கத்திற்கு ஏற்றதுபோல் இல்லாமல் மாறி வருகிறது. இதனால் மக்கள் சுத்தமான மற்றும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்று ஜெனிவாவில் ஐ.நா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தற்கு 161 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில் ஒரு நாடு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் சீனா, ஈரான், ரஷ்யா கூட்டமைப்பு உள்ளிட்ட நாடுகள் இதில் பங்கேற்கவில்லை.
இதைத்தொடர்ந்து தீர்மானத்தின்படி சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலில் வாழ்வது என்பது ஓர் அடிப்படை மனித உரிமை என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் தீர்மானத்தின்படி, உலக அளவில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், ஐ.நா. சபை உறுப்பு நாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாத்து, காலநிலை மாற்றத்தை தடுத்து சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலிலை எற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
UN resolution to Live in basic clean and safety environment