ஆப்கானிஸ்தான் : பெண்கள் கல்வி மீதான தடையை திரும்பப் பெற ஐ.நா வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை அமைத்தபின், பொது சுதந்திரத்தை கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்களை இயற்றி வருகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான அடக்கு முறையை அதிகரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை, ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விமானத்தில் ஆண்கள் துணையின்றி செல்ல தடை என பெண் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பயில தடை, அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் பணிபுரிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்களின் மீதான கல்வி தடையை நீக்க கோரி ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தலீபான்களிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், கல்வி கற்பதற்கு தடையாக இருக்கும் கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டிய நேரம் இது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி கற்பதற்கு பெண்கள் மீது உள்ள தடையை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிற்கான சர்வதேச கல்வி தினத்தின் கருப்பொருள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Un urges to withdraw ban on women education in Afghanistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->