"மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை" வரவேற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம்!
UN Wish To Woman Reservation
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் "மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை" வரவேற்றுள்ளது.
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரில், மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிராக 2 உறுப்பினா்களும், ஆதரவாக 454 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "பொது வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் மகளிரின் பங்காளிப்பதும், அவர்களை ஊக்குவிப்பதும் தான் சமூகத்தில் ஒட்டுமொத்தமாக பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் இந்த மசோதா உள்ளது. முக்கியமாக பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான முக்கிய முடிவுகளில் ஒன்றாக இதனை பார்க்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
UN Wish To Woman Reservation