சூடானில் ராணுவ மோதலால் பலியாகும் குழந்தைகள் - யுனிசெஃப் கவலை.!
UNICEF concerned for soodan army fight children died
சூடானில் ராணுவ மோதலால் பலியாகும் குழந்தைகள் - யுனிசெஃப் கவலை.!
உலகளவில் சத்துக்குறைபாடு காரணமாக நலிவடைந்து வரும் குழந்தைகள் அதிகமுள்ள நாடுகளில் சூடானும் ஒன்று. ஆனால், இந்த நாட்டில் தற்போது ரணுவத்தினர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்தை கடந்தும் நீடிக்கும் இந்த மோதல்களால் சத்து இல்லாமல் நலிவடைந்துள்ள குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது.
இந்த மோதலில் இதுவரைக்கும் 413 பேர் இறந்துள்ளனர். 3,551 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ஐநாவின் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு, பலியானவர்களில் ஒன்பது பேர் குழந்தைகள் என்றும், படுகாயமடைந்தவர்களில் 50 பேர் குழந்தைகள் என்றும் ஐநாவின் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
மேலும், ராணுவத்தினர் தொடர்ந்து மோதலில் ஈடுபடுவதால் அங்கே மின்சாரம், உணவுப்பொருள், மருந்துகள் மற்றும் நீர் போன்றவற்றின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால், குளிர்பதனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த உயிர்காக்கும் மருந்துகள் வீணாகி வருவதும் கவலை அளித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், சாமானியர்கள் அதற்கு மிகப்பெரிய அளவில் விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக அப்பாவி குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்த சூழல் மாறும்" என்று யுனிசெஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
UNICEF concerned for soodan army fight children died