மக்கள் தொகை வீழ்ச்சி : சீனாவில் திருமணமாகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனாத் தொற்றினால், அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் தான் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள் தொகை வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. 

இதனால், நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால், அங்கு பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரே குழந்தை என்ற கொள்கையை நாட்டின் அரசு கடந்த 2016-ம் ஆண்டு தளர்த்தி, கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கியது. 

இருப்பினும், நாட்டில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியை நோக்கி தான் செல்கிறது. இந்த நிலையில் சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் திருமணமாகாத இளைஞர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாகாண அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

அப்படி குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு, திருமணமான தம்பதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் ,மற்றும் மானியங்கள் உள்ளிட்டவை இனி திருமணமாகாத தம்பதிகளுக்கும் கிடைக்கும். 

இது தொடர்பாக மாகாணத்தின் அதிகாரிகள் தெரிவித்ததாவது, "வருகிற 15-ந் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும். அதன் படி, திருமணமானவர்கள் மற்றும் ஆகாதவர்கள் எவ்வளவு குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.
 

கடந்த சில ஆண்டுகளில் இந்த மாகாணத்தில் திருமணம் மற்றும் பிறப்பு விகிதங்கள் மிகவும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். 

மேலும், சீனாவின் 5-வது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக சிச்சுவான் இருந்தது. ஆனால், மக்கள்தொகையில் 21% க்கும் அதிகமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தற்போது இந்த மாகாணம் ஏழாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unmarried peoples legally have children in china


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->