மீண்டும் ரூ.4 ஆயிரம் கோடி வாரி வழங்கிய அமெரிக்கா.. தீவிரம் அடையும் ரஷியா-உக்ரைன் போர்! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவி அமெரிக்கா வழங்கியுள்ளதால் மீண்டும் ரஷியா-உக்ரைன் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ளது. 

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

இந்த போரின் தொடக்கத்தில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது. அதே சமயம் உக்ரைனுக்கு பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வரும் நிலையில், ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷிய ராணுவம் இன்று மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனின் மின்உற்பத்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் ஹாலுஸ்சென்கோ தெரிவித்துள்ளார். அதிநவீன டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதனையடுத்து உக்ரைன் ஏவுகணையை பயன்படுத்தினால் பதிலடியாக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் போர் மேலும் தீவிரம் அடைந்தது. எனவே உக்ரைனுக்கு மேலும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. புதிய ஜனாதிபதியாக டிரம்ப் விரைவில் பொறுப்பேற்க உள்ள நிலையில் உக்ரைனுக்கு இந்த உதவியை ஜோ பைடன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US gives Rs 4 000 crore again Russia Ukraine War Intensifies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->