அமெரிக்கா | போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த வாலிபர்!
us man trying hide police found dead
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், கடந்த மாதம் 26 ஆம் தேதி யாரும் இல்லாத ஒரு வீட்டின் ப்ரீசரில் இருந்து ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது அவர் பெயர் பிராண்டன் லீ புஷ்மேன் (வயது 34) என்பது தெரியவந்தது. இவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ப்ரீசரில் ஒளிந்து இருக்கலாம் என தெரிகிறது.
அவரை கைது செய்ய காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டதால் தப்பிக்க முயற்சி செய்து ஆளில்லாத வீட்டின் ப்ரீசரில் ஒளிந்து கொண்டிருக்கின்றார். மீண்டும் அதிலிருந்து அவரால் வெளியே வர முடியாமல் சிக்கி இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைகள் செய்யும் பொழுது எந்த ஒரு காயங்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.
அந்த வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டில் உள்ள எந்த ஒரு மின்சார உபயோகப் பொருட்களுக்கும் மின்சாரம் இணைக்கப்படாததால் அவரது உடலை மீட்கும் போது ப்ரீசர் இயக்கப்படாமல் இருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிப்ரவரி முதல் அந்த வீட்டில் ஆள் இல்லாமல் கிடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புஷ்மேன் ஒளிந்து கொண்ட பிரீசர் ஒரு பழைய மாடல் என்றும் அதனை வெளியே இருந்து மட்டுமே திறக்க முடியும் உள்ளே இருந்து திறக்க முடியாது என்றும் தெரிகிறது.
மேலும் அதனுள் ஒரு உலோக கம்பி இருந்ததாகவும் புஷ்மேன் அந்த கம்பியை வைத்து தாழ்பாலை திறக்க முயற்சி செய்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
us man trying hide police found dead