ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலர்கள் திருப்பித்தர அமெரிக்கா உத்தரவு - Seithipunal
Seithipunal


கொரோனா காலகட்டத்தில், ஏர் இந்தியா சில விமான சேவைகளை ரத்து செய்ததும், சில விமானங்களின் சேவையை மாற்றி அமைத்தது. இதனால் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயண கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி வழங்குவதற்கு நீண்ட கால தாமதம் செய்தது. 

ஆனால், அமெரிக்க போக்குவரத்து துறை கொள்கைப்படி, விமானங்கள் ரத்து செய்யப்பட்டவுடன் பயணிகளுக்கு கட்டணத்தை திருப்பித்தர வேண்டும். அப்படி தர மறுப்பதோ, கட்டணத்துக்கு பதில் பற்றுச்சீட்டுகளை அளிப்பதோ சட்ட விரோதமாகும். 

இந்த கொள்கைக்கு முரணாக ஏர் இந்தியா நடந்து கொண்டதால், அமெரிக்க போக்குவரத்து துறையிடம் 1,900 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் இந்தியா 121.5 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.987 கோடி) திருப்பித்தர வேண்டும் என்று அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கட்டணத்தை திருப்பித் தருவதில் அதிக தாமதம் செய்ததற்காக 1.4 மில்லியன் டாலர் ( ரூ.11 கோடி) அபராதம் விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US orders Air India to pay 121 million dollor as passenger refunds


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->