அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு என்ன ஆனது? வெள்ளை மாளிகை மருத்துவக் குழு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவக் குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த 21-ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் எதிரொலியாக கடந்த 27-ஆம் தேதி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததார்.

இந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை வெள்ளை மாளிகை தனது சுட்டுரைப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும், அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓகானர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US President Joe Biden health White House Medical Panel Report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->