#சிரியா | ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் - 11 பேர் பலி - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு நாடான சிரியாவின் ஹசாக்கா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளின் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ஆளில்லா விமானம் மூலம் கடந்த வியாழக்கிழமை கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த நிலையில், ஐந்துக்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் வடகிழக்கு சிரியாவில் ஹஸ்ஸகேஹ் பகுதியில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 ஈரான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, ஈரானுடன் நாங்கள் போர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும், ஹசாக்காக்கில் நடைபெற்ற தாக்குதலுக்கே பதிலடி கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கர்களைப் பாதுகாக்க அமெரிக்கா வலிமையுடன் செயல்படும் என்றும், எந்த ஒரு தவறும் செய்ய வேண்டாம் என ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US retaliates Iran support terrorists in syria killed 11


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->