காலம் கடந்தாலும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
Us secretary assures actions against terrorism
காலம் கடந்தாலும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் நைரோபி மற்றும் டான்சானியா பகுதியில் உள்ள இரண்டு அமெரிக்க தூதரகங்கள் மீது 1998ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 12 அமெரிக்கர்கள் உட்பட 224 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலின் 24ஆவது நினைவு தின நிகழ்ச்சி அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கிழக்கு ஆப்பிரிக்காவில் நடந்த தொடர் தாக்குதலுக்கு காரணமாக இருந்த அல்கொய்தா தலைவன் ஜாவஹிரியை கொன்றதன் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும் காலம் கடந்தாலும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று உறுதி அளித்துள்ளார்.
English Summary
Us secretary assures actions against terrorism